தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் வழியில் படித்தோருக்கு எஸ்.ஐ., தேர்வில் இட ஒதுக்கீடு

தமிழ் வழியில் படித்தோருக்கு எஸ்.ஐ., தேர்வில் இட ஒதுக்கீடு

தமிழ் வழியில் படித்தோருக்கு எஸ்.ஐ., தேர்வில் இட ஒதுக்கீடு


UPDATED : பிப் 11, 2021 12:00 AM

ADDED : பிப் 11, 2021 04:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2021 12:00 AM ADDED : பிப் 11, 2021 04:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
&'டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., தேர்வு நடைமுறைகளில், தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீடு பின்பற்றுவதைப் போல், வரும் காலங்களில் எஸ்.ஐ., தேர்வு நடைமுறையில் பின்பற்றப்படும்&' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழக அரசு உத்தரவாதம் அளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனு:
 
நான் பிளஸ் 2 வரை மற்றும் பட்டப் படிப்பை, தமிழ் வழியில் முடித்தேன். தேர்வு வாரியம்அதற்குரிய, பி.எஸ்.டி.எம்., சான்று உள்ளது. எஸ்.ஐ., பணி நேரடித் தேர்விற்கு, 2019 மார்ச், 8ல் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்காணல் அடிப்படையில், தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நேர்காணலுக்கான தற்காலிக தேர்வுப் பட்டியல், டிச., 1ல் வெளியானது. அதில், என் பெயர் இல்லை. தேர்வு நடைமுறைகளில், தமிழ் வழியில் படித்தோருக்கான இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை.
இதனால், என்னைப் போன்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.டி.என்.பி.எஸ்.சி.,டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடைமுறைகளில் உள்ளது போல், எஸ்.ஐ., பணிக்கான, மூன்று கட்ட தேர்வின் ஒவ்வொரு நிலையிலும், தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும். தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டை, எஸ்.ஐ., பணிக்கான ஒட்டுமொத்த தேர்வு நடைமுறையிலும் பின்பற்ற வேண்டும்.
தற்காலிக தேர்வுப் பட்டியல் மற்றும் அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல், மேலும் சிலர் மனு செய்தனர். 
இறுதிக் கட்டம்

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பு, &'நேர்காணல் தேர்வு, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
&'டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய நடைமுறைகளில், ஒவ்வொரு நிலையிலும், தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீடு பின்பற்றுவதைப் போல், வரும் காலங்களில், எஸ்.ஐ., தேர்வு நடைமுறையில் பின்பற்றப்படும்&' என, உத்தரவாதம் அளித்தது. 
இதை பதிவு செய்த நீதிபதிகள், &'தமிழ் வழியில் படித்தோருக்கான, 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட &'கட் - ஆப்&' மதிப்பெண்களை, மனுதாரர்கள் பெற்றிருந்தால், அவர்களை பரிசீலிக்க வேண்டும்&' என உத்தரவிட்டு, பைசல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us