தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் ஆள்மாறாட்ட வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற பரிந்துரை

நீட் ஆள்மாறாட்ட வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற பரிந்துரை

நீட் ஆள்மாறாட்ட வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்ற பரிந்துரை


UPDATED : மார் 14, 2021 12:00 AM

ADDED : மார் 14, 2021 08:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2021 12:00 AM ADDED : மார் 14, 2021 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
நீட் ஆள்மாறாட்ட வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றுவது தான் சரியாக இருக்கும். இதில் சி.பி.ஐ.,யின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
&'நீட்&' தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம், மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக, சென்னை மாணவர் உதித்சூர்யா உட்பட சிலர் மீது, 2019ல், தேனி சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்தனர். 
இதில் கைதான இடைத்தரகர் கேரளாவைச் சேர்ந்த ரஷீத், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்ட, 17 பேரில், 16 பேர் கைதாயினர். அவர்கள் ஜாமின், முன்ஜாமினில் வெளியே சென்றுள்ளனர். வழக்கில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்காக, ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு, தேர்வு எழுதியவர்களை, இதுவரை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. சம்பவத்திற்கும், எனக்கும் தொடர்பில்லை. கைதானவர்களின் வாக்குமூலம் அடிப்படையில், வழக்கில் என்னை தவறாக சேர்த்துள்ளனர். ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் குறிப்பிட்டார்.
இவ்வழக்கில் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கை, தற்போதைய நிலை குறித்து அறிக்கை மற்றும் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி., தரப்பு மார்ச், 10ல் தாக்கல் செய்தது. நீதிபதி எம்.நிர்மல்குமார் விசாரித்தார். மனுதாரர் தரப்பு, மனுவை வாபஸ் பெற அனுமதி கோரியது; நீதிபதி நிராகரித்தார். சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., வேல்முருகன் ஆஜராகி, &'&'ஆள்மாறாட்டத்தை கண்டறிய சிலரது போட்டோக்கள் ஒப்பீடு மற்றும் கைரேகையை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்,&'&' என்றார்.
நீதிபதி உத்தரவு:

இவ்வழக்கில் தொடர்புடைய மாணவர்களுக்காக, வெளிமாநில தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம் மூலம் சிலர் தேர்வு எழுதியுள்ளனர். ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக, தமிழகத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதுபோல் பிற மாநிலங்களில் நடந்திருக்க வாய்ப்புள்ளது. இவ்வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றினால் தான் சரியாக இருக்கும். மேலும் பல உண்மைகளை வெளிக்கொணர முடியும் என இந்நீதிமன்றம் கருதுகிறது. மதுரை, சி.பி.ஐ., - எஸ்.பி., தரப்பில் நிலைப்பாட்டை, மார்ச், 18ல் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us