தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துறை தேர்வுகளுக்கு விடைக்குறிப்பு வெளியீடு

துறை தேர்வுகளுக்கு விடைக்குறிப்பு வெளியீடு

துறை தேர்வுகளுக்கு விடைக்குறிப்பு வெளியீடு


UPDATED : மார் 14, 2021 12:00 AM

ADDED : மார் 14, 2021 08:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2021 12:00 AM ADDED : மார் 14, 2021 08:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, துறை தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 152 துறை தேர்வுகள், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டன. வினாத்தாளில், &'அப்ஜெக்டிவ்&' வகை வினாக்கள் மற்றும் விவரித்து எழுதுதல் ஆகியவற்றின் அடிப்படையில், வினாக்கள் அமைக்கப்பட்டன.
இதில், 119 தேர்வுகளின் உத்தேச விடைக்குறிப்பை, தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள், இந்தக் குறிப்பை, தேர்வாணையத்தின் இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.
குறிப்புகளில் மாற்று கருத்து மற்றும் ஆட்சேபனை உள்ளவர்கள், contacttnpsc@gmail.com என்ற, இ- மெயிலில் உரிய விடை குறித்த விபரங்களை, வரும், 18ம் தேதிக்குள் அனுப்பலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us