UPDATED : மார் 14, 2021 12:00 AM
ADDED : மார் 14, 2021 08:04 PM
சென்னை:
&'கிராபிக் டிசைனர்&' மற்றும் &'டிஜிட்டல்&' படத் தொகுப்பு தொடர்பான, வேலைவாய்ப்பு சார்ந்த இலவச திறன் பயிற்சியை, 15ம் தேதி முதல், தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் நடத்துகிறது.
இது குறித்து, தேசிய திரைப்பட வளர்ச்சி கழக பொது மேலாளர் டி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பில், டிஜிட்டல் படத் தொகுப்பு, &'வீடியோ எடிட்டிங்&' சார்ந்த, 240 மணி நேரம், இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. அதே போல, 430 மணி நேரம், கிராபிக் டிசைனர் திறன் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி வாயிலாக, செய்தித்தாள், உள்ளூர் போட்டோ ஸ்டூடியோ, சினிமா, &'டிவி&'க்களில் வேலைவாய்ப்பு பெறலாம். வரும், 15ம் தேதி துவங்கும் இந்த பயிற்சியில், 10ம் வகுப்பு முடித்த, 18 முதல், 35 வரையிலான ஆண், பெண் இருபாலரும் சேரலாம். நேரடி முன்பதிவு செய்யப்படுகிறது.
மேலும் விபரங்களை, 044 - 2819 1203, 2819 2506, 2819 2407 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
