UPDATED : மார் 14, 2021 12:00 AM
ADDED : மார் 14, 2021 08:19 PM
கடலுார்:
&'தினமலர்&' நாளிதழ் கவுரவ ஆசிரியர், நாணய வியலின் தந்தை டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவையொட்டி, கடலுார், புதுப்பாளையம் துர்கா தனி பயிற்சிக் கல்லுாரியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
துர்கா தனி பயிற்சிக் கல்லுாரி மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கம் சண்முகம் வரவேற்றார். நேரு யுவக்கேந்திரா மாவட்ட அலுவலர் ரிஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு, தலைமை தாங்கிய பாரதிதாசன் இலக்கிய மன்ற மாவட்ட தலைவர் கடல் நாகராஜன் பேசுகையில், &'டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவு, உலகிற்கு மட்டு மின்றி நாணயவியல் துறைக்கும், வரலாற்று ஆய்வுத் துறைக்கும் பெரிய இழப்பாகும்&' என்றார்.
தொடர்ந்து, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். ஏ.கே.எஸ்., கல்லுாரி நிறுவனர் கார்த்தி, நேரு யுவகேந்திரா பல்நோக்கு பணியாளர் ராமமூர்த்தி, ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அதிகாரி இளங்கோவன், ஆசிரியர்கள் தியாகராஜன், பாபு பங்கேற்றனர். மன்ற செயலர் மூர்த்தி, நன்றி கூறினார்.
