தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/25 மாணவியருக்கு கொரோனா பாதிப்பு

25 மாணவியருக்கு கொரோனா பாதிப்பு

25 மாணவியருக்கு கொரோனா பாதிப்பு


UPDATED : மார் 22, 2021 12:00 AM

ADDED : மார் 22, 2021 11:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2021 12:00 AM ADDED : மார் 22, 2021 11:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்:
கும்பகோணத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில், மேலும் 25 மாணவியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர், ஒரத்தநாடு, கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள 11 பள்ளிகள், இரண்டு கல்லுாரிகள், ஒரு பல்கலை ஆகியவற்றில், மாணவ - மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி வேன் டிரைவர்கள் என, கடந்த இரு வாரங்களில், 150 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில், நேற்று முன்தினம் மாலை வரை, 66 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன், கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஒரு ஆசிரியர், ஆறு மாணவியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, அங்கு பயிலும், 1,200 மாணவியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியானதில், 25 மாணவியருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.பாதிக்கப்பட்ட மாணவியர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us