18 சதவீத தேர்தல் ஊழியர்கள் தபால் ஓட்டுக்கு விண்ணப்பம்
18 சதவீத தேர்தல் ஊழியர்கள் தபால் ஓட்டுக்கு விண்ணப்பம்
UPDATED : மார் 22, 2021 12:00 AM
ADDED : மார் 22, 2021 11:33 AM
சிவகங்கை:
தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 18 சதவீதம் பேர் மட்டுமே தபால் ஓட்டுக்காக விண்ணப்பம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் 23 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் ஒரு ஓட்டுச்சாவடிக்கு 5 அலுவலர்கள் வீதம் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆசிரியர்கள் உட்பட ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் வரை நியமனம் செய்யப்படுகின்றனர். அதிகாரிகள் நிலையில் அனைத்து துறையிலும் 50 ஆயிரம் பேர் வரை தேர்தல் அலுவலராக பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
கூடுதல் பணியாளர்களாக 10 சதவீதமாக 16,500 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். மொத்தம் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 100 பேர் பணியில் உள்ளனர். இதில் படிவம் 12 மூலம் தபால் ஓட்டுக்காக விண்ணப்பம் செய்தவர்கள் 33,200 பேர் மட்டுமே. மொத்தமாக 18 சதவீதம் பேர் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களே நுாறு சதவீதம் ஓட்டளிக்க முன் வராத போது பொதுமக்கள் நுாறு சதவீதம் ஓட்டுப்போடுவதை எப்படி எதிர்பார்க்க முடியும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் முதலில் நுாறு சதவீதம் ஓட்டுப்போட முன் வர வேண்டும்.
