தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தரமற்ற ஆசிரியர் பயிற்சி

தரமற்ற ஆசிரியர் பயிற்சி

தரமற்ற ஆசிரியர் பயிற்சி


UPDATED : மார் 22, 2021 12:00 AM

ADDED : மார் 23, 2021 04:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2021 12:00 AM ADDED : மார் 23, 2021 04:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டில் உள்ள 17,503 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமானவை 
தனியாருக்கு சொந்தமானவை. இவற்றின் தரம் குறித்து  அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது.  

நாட்டில் உள்ள 17,503 ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமானவை தனியாருக்கு சொந்தமானவை. இவற்றின் தரம் குறித்து  அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. 

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 29 தனியார் பயிற்சி நிறுவனங்களில் 26ல் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்றும் இந்த சிக்கலை மறைக்க வேண்டுமென்றே ஊழல் நடைமுறைகளை பின்பற்றுவதாகவும், ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலான தனியார் பயிற்சி மையங்கள் போதிய பாடத்திட்டத்தை பின்பற்றப்படாததோடு, வருகை பற்றாக்குறை உள்ள அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதித்துள்ளதும், கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும், பெரும்பாலான பயிற்சி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை; 50 சதவீதத்திற்கும் அதிகமான மையங்களில் பாடத்திட்ட ஆய்வகங்கள் இல்லை; 30 சதவீதத்திற்கும் அதிகமான மையங்களில் நூலகங்கள், கணினி ஆய்வகங்கள் அல்லது கருத்தரங்கு அரங்குகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us