தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரியில் வேலை வாய்ப்பு ஏற்படுத்துவோம்

புதுச்சேரியில் வேலை வாய்ப்பு ஏற்படுத்துவோம்

புதுச்சேரியில் வேலை வாய்ப்பு ஏற்படுத்துவோம்


UPDATED : மார் 23, 2021 12:00 AM

ADDED : மார் 23, 2021 03:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 23, 2021 12:00 AM ADDED : மார் 23, 2021 03:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி;
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிஅமைந்ததும், பல்வேறு தொழிற் சாலைகளை அமைத்து வேலை வாய்ப்பு அளிக்கும் சூழ்நிலையை உருவாக்குவோம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.
ஜெயராம் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி., கண்ணன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., பொது செயலாளர்கள் செல்வம், மோகன்குமார், என்.ஆர். காங்.,ஜெயபால் உட்பட பலர் பங்கேற்றனர். 
கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:காங்., ஆட்சி செய்த போது நாடு மிகப்பெரிய வறுமையில் இருந்தது. 2016 இல் பிரதமர் நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது. நாட்டில் வறுமையை ஒழித்து, வளர்ச்சி அளிக்க வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நோக்கம்.பிரதமர் மோடி சுயநலமின்றி உழைக்கிறார். மத்தியில் காங்., கட்சி ஆட்சி செய்ய 55 ஆண்டுகள் மக்கள் வாய்ப்பினை அளித்தனர். புதுச்சேரியிலும் காங்., ஆட்சி அமைக்க பெரிய வாய்ப்பை அளித்தனர். ஆனால் எந்த வளர்ச்சியும் அடையவில்லை. பா.ஜ., ஆட்சி வந்த பிறகு இரு கட்சி ஆட்சிகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் அமைந்ததும், பல தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்பு தரும் சூழ்நிலையை நிச்சயமாக உருவாக்குவோம்.புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கு சிறப்பு மிக்க கூட்டணியை அமைத்துள்ளோம். இந்த கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். புதுச்சேரியில் சாலை வசதிகள், சர்வதேச கட்ட மைப்புகளை தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்படுத்தி தரும். சட்டசபை தேர்தலில் பா.ஜ.,- என்.ஆர். காங்.,-அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us