UPDATED : மார் 23, 2021 12:00 AM
ADDED : மார் 23, 2021 03:58 PM
புதுச்சேரி;
பாரதிதாசன் கல்லுாரியில் மேலும் 2 பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவிகளுக்கு, கடந்த வாரம் செமஸ்டர் தேர்வு நடந்தது. முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வகுப்புகள் நடந்தது. கடந்த 16ம் தேதி, கல்லுாரியில் பணியாற்றும் 4 பேராசிரியர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டதால், உடனடியாக முதலாம் ஆண்டு மாணவிகள் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. செமஸ்டர் தேர்வும் ரத்து செய்து கல்லுாரி மூடப்பட்டது.
ரத்தான செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வழியாக நடக்கிறது. முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,கல்லுாரியில் பணி புரியும் மேலும் 2 பேராசிரியர்களுக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
