தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

புதிய தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

புதிய தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு


UPDATED : மார் 25, 2021 12:00 AM

ADDED : மார் 25, 2021 03:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2021 12:00 AM ADDED : மார் 25, 2021 03:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்;
&'&'ஊசுடு தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர பாடுபடுவேன்&' &'என பா.ஜ., வேட்பாளர் சாய் ஜெ சரவணன்குமார் கூறினார்.
ஊசுடு தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் சாய் ஜெ சரவணன்குமார். என்.ஆர்.காங்., - அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் சென்று கூடப்பாக்கம் பகுதியில் நேற்று ஓட்டு சேகரித்தார். அப்பகுதி மக்கள், வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
ஓட்டு சேகரிப்பின்போது வேட்பாளர் சாய் ஜெ சரவணன்குமார் பேசியதாவது:

புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி பெறவேண்டும் என்றால் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். வெற்றி பெற்று பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், அரசு துறைகளில் காலியாக உள்ள 9 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். அப்போது, இந்த தொகுதியில் படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைத்திட பாடுபடுவேன்.
தொகுதியில் மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்கவும், புதிய தொழிற்சாலை கொண்டுவரவும் முயற்சி செய்வேன். தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்பேன். கரசூர் பகுதியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு நிலம் எடுக்கப்பட்ட இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க முயற்சி எடுப்பேன். 
கூடப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பத்துக்கண்ணு பகுதியில் நவீன வசதிகளுடன் திருமண மண்டபம் அமைக்கப்படும். கூடப்பாக்கம் பகுதியில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு அரங்கம் அமைத்துக் கொடுப்பேன். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வசதி ஏற்படுத்தி தருவேன். இவ்வாறு அவர் வாக்குறுதி அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us