தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்


UPDATED : மார் 25, 2021 12:00 AM

ADDED : மார் 25, 2021 03:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2021 12:00 AM ADDED : மார் 25, 2021 03:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்;
நேரடி தேர்வை ரத்து செய்யக்கோரி அண்ணா கல்லுாரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலைக்கால் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் விருப்பப்படி நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ தேர்வுகள் நடத்தலாம் என புதுவை பல்கலைக்கழகம் அறிவித்தது. அதையடுத்து கல்லுாரிகளில் ஆன்லைனில் தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. 
இந்நிலையில் அண்ணா கல்லுாரியில் திடீரென நேரடி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், நேரடி தேர்வை ரத்து செய்ய கோரி, மாணவர்கள் கல்லுாரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us