தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காமராஜர் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவிக்க வழக்கு

காமராஜர் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவிக்க வழக்கு

காமராஜர் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவிக்க வழக்கு


UPDATED : மார் 25, 2021 12:00 AM

ADDED : மார் 25, 2021 03:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2021 12:00 AM ADDED : மார் 25, 2021 03:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை தேசிய கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நாடார் மகாஜன சங்கம் தலைவர் ஜோவின் பார்ச்சுனேட் தாக்கல் செய்த பொதுநல மனு:

கல்வி மேம்பாட்டிற்கு காமராஜர் பங்களிப்பை போற்றும் வகையில், அவரது பிறந்தநாளை (ஜூலை 15) கல்வி வளர்ச்சி நாளாக 2006 முதல் தமிழக அரசு கொண்டாடி வருகிறது. அவரது பிறந்தநாளை தேசிய கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜோவின் பார்ச்சுனேட் மனு செய்தார்.
நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு, மத்திய உள்துறை அமைச்சகம், மாநில உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்கள் ஒத்திவைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us