UPDATED : ஏப் 07, 2021 12:00 AM
ADDED : ஏப் 07, 2021 09:31 AM
தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுடன் &'ஆன்லைன்&' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி ஆலோசனை கூறவுள்ளார்.
&'பரிக் ஷா பே சர்ச்சா&' எனப்படும் &'தேர்வுகள் பிரச்னை அல்ல&' என்ற தலைப்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுடன் 2018 முதல் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறார்.
நடப்பு ஆண்டில் மாணவர்களுடனான கலந்துரையாடல் &'ஆன்லைன்&' வாயிலாக நடக்கிறது. இதுகுறித்து பிரதமர் வெளியிட்டு உள்ள &'டுவிட்டர்&' பதிவில், பல கேள்விகளுடன் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்கள் பெற்றோர் பங்கேற்கும் &'பரிக் ஷா பே சர்ச்சா&' நிகழ்ச்சி இரவு 7:00 மணிக்கு நடக்கும்.
இதனுடன் வெளியிட்டுள்ள வீடியோவில் பிரதமர் கூறும்போது, &'உங்களை நேரில் சந்தித்து கலந்துரையாட ஆவலாக இருக்கிறேன். ஆனால் கடந்த ஓராண்டாக நாம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருப்பதால் அது முடியவில்லை. எனவே நம் கலந்துரையாடல் ஆன்லைன் வாயிலாக நடக்கிறது&', என தெரிவித்து உள்ளார்.
அத்துடன் வாழ்வின் கனவுகளை நிறைவேற்ற விரும்பும் மாணவர்கள் தேர்வுகளை ஒரு வாய்ப்பாக கருத வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
