UPDATED : ஏப் 07, 2021 12:00 AM
ADDED : ஏப் 07, 2021 09:41 AM
ஸ்ரீஈஸ்வர் இன்ஜி., கல்லுாரியின் சார்பில், ஜோன்-10 இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான கூடைப்பந்து, வாலிபால் போட்டிகள் நடந்தது. 12 அணிகள் பங்கேற்றன.
மாணவர்களுக்கான கூடைப்பந்து இறுதிப்போட்டியில், ஸ்ரீஈஸ்வர் கல்லுாரி அணி, 58-35 என்ற புள்ளி கணக்கில், ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது.
மாணவர்களுக்கான வாலிபால் இறுதிப்போட்டியில், ஸ்ரீஈஸ்வர் கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், இந்துஸ்தான் இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட கிரிக்கெட் போட்டி
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 2019- 20ம் ஆண்டு, &'காசா கிராண்ட்&' டிராபிக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் &'லீக்&' போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி &'ஏ&' மைதானத்தில் நடந்தது.
இதில் ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணி, கே.எப்., கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஸ்ரீ கிரிக்கெட் கிளப் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு, 247 ரன் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய கே.எப்., கிரிக்கெட் கிளப் அணி 38.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 143 மட்டுமே எடுத்தது. இதன் மூலம், ஸ்ரீ சி.சி., அணி, 104 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆறாவது டிவிஷன் கிரிக்கெட்; நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் வெற்றி
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டுக்கான ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, கோவையின் பல்வேறு கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி &'சி&' மைதானத்தில் நடந்த போட்டியில், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா சி.சி., அணி, நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் சி.ஏ., அணிகள் மோதின. முதலில் விளையாடிய ராமகிருஷ்ணா மிஷன் அணி, 42.1 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 173 ரன் எடுத்தது. நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் சி.ஏ., அணி, 35.5 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 178 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுகுணா கல்லுாரி சார்பில் கிரிக்கெட் போட்டி
கோவை, நேருநகர் சுகுணா பாலிடெக்னிக் கல்லுாரியின் சார்பில், &'சுகுணா பிரிமியர் லீக்&' 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது. 32 அணிகள் பங்கேற்றன.
போட்டியின் முடிவில், கோவைப்புதுார் &'ஸ்மால் பாய்ஸ்&' அணி முதலிடம், தொட்டிப்பாளையம் வைப்பர் சி.சி., இரண்டாமிடம் பிடித்தது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு, சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமிநாராயணசாமி கோப்பைகள் வழங்கினர். கல்லுாரி முதல்வர், டீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட டென்னிஸ் போட்டி
எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனம் சார்பில், மாணவிகளுக்கான டென்னிஸ் போட்டி சரவணம்பட்டி, எஸ்.என்.எஸ்., ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. மாணவிகளுக்கான, 16, 18, 25 வயது என, மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், 20 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஒற்றையர் பிரிவு
16 வயதுக்கு உட்பட்ட இறுதிப்போட்டியில், விஷ்ருதி, 9-0 என்ற புள்ளி கணக்கில், சாத்விகாவையும்; 18 வயது பிரிவில், தர்ஷனா, 9-3 என்ற புள்ளி கணக்கில், பிரியதர்ஷினியையும்; 25 வயது பிரிவில், சகாயா ஏஞ்சலின், 9-1 என்ற புள்ளி கணக்கில், தர்ஷனாவையும் வென்றனர்.
இரட்டையர் பிரிவு
25 வயதுக்கு உட்பட்ட இறுதிப்போட்டியில், பிரியதர்ஷினி, தர்ஷனா ஜோடி அணி, 7-1 என்ற புள்ளி கணக்கில், சகாயா ஏஞ்சலின், நிவேதா எமரால்ட் ஜோடி அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் வழங்கப்பட்டன.
மூன்றாம் டிவிஷன் போட்டி
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டு &'தாமோதரன் அறக்கட்டளை டிராபிக்கான&' மூன்றாம் டிவிஷன் லீக் போட்டி, கோவையின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. துடியலுார், &'டைமண்ட் சிட்டி&' மைதானத்தில் நடந்த போட்டியில், சூர்யபாலா கிரிக்கெட்டர்ஸ் அணி, ஆறுமுகம் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய சூர்யபாலா அணி, 34.5 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 162 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆறுமுகம் சி.சி., அணி, 36 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு, 163 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தேசிய பூப்பந்து போட்டிக்கு கோவை வீராங்கனை தேர்வு
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் 66வது சீனியர் ஆண், பெண்களுக்கான தேசிய பூப்பந்து போட்டி வரும், 31 துவங்கி, ஏப்., 4ல் நிறைவடைகிறது.
