தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்- பிரியங்கா காந்தி

தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்- பிரியங்கா காந்தி

தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்- பிரியங்கா காந்தி


UPDATED : ஏப் 12, 2021 12:00 AM

ADDED : ஏப் 12, 2021 11:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 12, 2021 12:00 AM ADDED : ஏப் 12, 2021 11:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாணவர்களை தேர்வு எழுத வற்புறுத்துவது சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது, என, காங்., பொதுச் செயலர் பிரியங்கா சாடியுள்ளார்.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. கொரோனாவை சுட்டிக்காட்டி  இந்த தேர்வுகளை, &'ஆன்லைன்&' வாயிலாக நடத்தக்கோரி, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது குறித்து பிரியங்கா கூறியதாவது:
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இந்த சூழலில், மாணவர்களை தேர்வு எழுத வற்புறுத்துவது, சி.பி.எஸ்.இ., போன்ற கல்வி வாரியங்களின் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது.
இது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, திட்டமிடப்பட்டுள்ள தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us