தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.ஏ., தேர்வு முடிவுகள்

சி.ஏ., தேர்வு முடிவுகள்

சி.ஏ., தேர்வு முடிவுகள்


UPDATED : ஏப் 12, 2021 12:00 AM

ADDED : ஏப் 12, 2021 11:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 12, 2021 12:00 AM ADDED : ஏப் 12, 2021 11:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பு கிட்டை மலேசிய தொழிலதிபர் இலவசமாக வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பிரகதீஷ் குமார் இவர் மலேசியாவில் தொழில் அதிபராக உள்ளார். இந்நிலையில் மாவட்டத்தில் பள்ளிகளில் பிளஸ் டூ வகுப்பு பயிலும் சுமார் 4000 மாணவர்களுக்கு மாஸ் சானிடைசர், சோப் ஆகிய பொருட்கள் அடங்கிய கொரோனா நோய்தொற்று தடுப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கினார்
பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் அப்பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை மலேசிய தொழிலதிபர் பிரகதீஷ் குமாரின் அப்பா சூரிய பிரகாசம் பெரம்பலூர் சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் சிதம்பரத்திடம் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us