UPDATED : ஏப் 12, 2021 12:00 AM
ADDED : ஏப் 12, 2021 12:01 PM
மதுரையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்., 16 முதல் 23 வரை செய்முறை தேர்வுகள் நடக்கின்றன. தேர்வின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகள் (எஸ்.ஓ.பி.,) கடுமையாக பின்பற்ற கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்டத்தில் 321 பள்ளிகளை சேர்ந்த 37 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக அரசு சார்பில் சிறப்பு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எஸ்.ஓ.பி.,யை பின்பற்றுவது குறித்து முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் டி.இ.ஓ.,க்கள், தலைமையாசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
பின் முதன்மை கல்வி அலுவலர் கூறியதாவது:
ஒரு ஆய்வகத்தில் 25 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். ஒரு பேட்ச் முடிந்த பின் ஆய்வகம் முழுவதும் சானிடைசர்ஸ் தெளிக்க வேண்டும்.
மைக்ரோஸ்கோப், பிப்பெட் போன்ற ஆய்வக பொருட்கள் பயன்படுத்த கூடாது. டயகிராம், இமேஜ், பிக்சர்ஸ் போன்றவற்றை தனித்தனியாக பயன்படுத்தலாம். மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் ஆய்வகங்களில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, என்றார்.
