தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு நிர்வாகத்தின் கீழ் வந்த இரு கல்லூரிகள்

அரசு நிர்வாகத்தின் கீழ் வந்த இரு கல்லூரிகள்

அரசு நிர்வாகத்தின் கீழ் வந்த இரு கல்லூரிகள்


UPDATED : ஏப் 12, 2021 12:00 AM

ADDED : ஏப் 12, 2021 12:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 12, 2021 12:00 AM ADDED : ஏப் 12, 2021 12:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மற்றும் பல் மருத்துவ கல்லுாரிக்கு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வாயிலாக தேர்வு நடத்தக் கோரிய வழக்கில் அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றது. இப்பல்கலையின் இணைப்பு பெற்ற ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மற்றும் பல் மருத்துவ கல்லுாரியும் அரசு கல்லுாரிகளாக அறிவிக்கப்பட்டன. அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தையே ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கும் நிர்ணயிக்கும் படி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த கல்லுாரிகளின் மாணவர்கள் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் அதன் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் டாக்டர் ரவீந்திரநாத், தாக்கல் செய்த மனு:

அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்டுள்ள, ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மற்றும் பல் மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு தேர்வு நடத்தும்படி அண்ணாமலை பல்கலையை இக்கல்லுாரிகள் கேட்டுள்ளன.
இந்த கல்லுாரிகளின் மாணவர்களுக்கான தேர்வை எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை தான் நடத்த வேண்டும். எனவே ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மற்றும் பல் மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கான தேர்வை நடத்த எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் தங்கசிவன் ஆஜரானார். 
மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு உத்தரவிட்டு, விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us