UPDATED : மே 16, 2021 12:00 AM
ADDED : மே 16, 2021 09:55 AM
புதுடில்லி:
அடுத்த மாதம் 27ல் நடைபெறுவதாக இருந்த, 2021ம் ஆண்டுக்கான &'சிவில் சர்வீஸ்&' முதல்நிலைத் தேர்வு, அக்., 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக, சிவில் சர்வீஸ் தேர்வுகளை யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும் நடத்துகிறது.
முதல்நிலைத் தேர்வு, &'மெயின்&' தேர்வுகளில் தேர்ச்சி அடைவோர் நேர்முகத் தேர்வுக்கு பின், பணியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
&'இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு, அடுத்த மாதம் 27ல் நடைபெறும்&' என, அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால், தேர்வை வரும் அக்., 10ம் தேதிக்கு ஒத்திவைத்து யு.பி.எஸ்.சி., நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
பி.எப்., அலுவலக பணியாளர் தேர்வு, 2020ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் நேர்முக தேர்வு உள்ளிட்ட பல தேர்வு தேதிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
