UPDATED : மே 23, 2021 12:00 AM
ADDED : மே 23, 2021 09:27 PM
லண்டன்:
ஆக்ஸ்போர்டு பல்கலையில் நடந்த மாணவர் சங்க தலைவருக்கான தேர்தலில், இந்திய வம்சாவளி மாணவி வெற்றி பெற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில், மாணவர் சங்க தலைவராக இருந்த இந்திய வம்சாவளி மாணவி ராஷ்மி சமந்த், சமூக வலை தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டார். இதையடுத்து பிப்ரவரியில் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டார்.
இதையடுத்து மாணவர் சங்க தலைவரை தேர்வு செய்வதற்கான இடைத்தேர்தல் நடந்தது. இதில், இந்திய வம்சாவளி மாணவியும், &'ஆக்ஸ்போர்டு இந்தியா சொசைட்டி&' எனப்படும் ஆக்ஸ்போர்டுக்கான இந்திய மாணவர்கள் அமைப்பின் தலைவருமான அன்வீ பூட்டானி என்ற மாணவி போட்டியிட்டார். இவருடன் மேலும் 10 பேர், இந்த பதவிக்காக போட்டியிட்டனர். ஆக்ஸ்போர்டு பல்கலையில், மாணவர் சங்கத் தலைவருக்கான தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டது, இதுவே முதன்முறை.
இந்த இடைத்தேர்தலில் 2,506 பேர் ஓட்டளித்தனர்; இது, இதுவரை நடந்த இடைத்தேர்தல்களில் பதிவான ஓட்டுகளை விட அதிகம். இந்த தேர்தலில் அன்வீ பூட்டானி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
