UPDATED : ஜூன் 03, 2021 12:00 AM
ADDED : ஜூன் 03, 2021 06:12 PM
பெங்களூரு:
கொரோனாவால் பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு, முதுகலை படிப்பு சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
கொரோனாவால் வருமானம் இழந்த குடும்ப மாணவர்களுக்கு உதவும் வகையில் பல்கலைக்கழக துணைவேந்தர் கெம்பராஜு கூறியதாவது:
பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகத்தில், 26 முதுநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. மாணவர்களின் எதிர்காலம் கருதி இப்பல்கலைக்கு உட்பட கல்லுாரிகளில் படிக்கும் முதுகலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து இந்த வாய்ப்பு வழங்கப்படும். இவர்களுக்கு போக, மீதி இடம் இருக்கும் பட்சத்தில், மற்ற பல்கலைக்கழக மாணவர்கள் விண்ணப்பிப்பது குறித்து அறிவிக்கப்படும்.
கொரோனாவால் வருமானம் இழந்த குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்லுாரி கட்டணம் செலுத்துவதில் சலுகை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இது தொடர்பாக விரைவில் நடக்க உள்ள &'சிண்டிகேட்&' கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
