தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 பொதுத் தேர்வு: மாணவர்கள், பெற்றோர் மனநிலை என்ன?

பிளஸ் 2 பொதுத் தேர்வு: மாணவர்கள், பெற்றோர் மனநிலை என்ன?

பிளஸ் 2 பொதுத் தேர்வு: மாணவர்கள், பெற்றோர் மனநிலை என்ன?


UPDATED : ஜூன் 05, 2021 12:00 AM

ADDED : ஜூன் 05, 2021 01:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 05, 2021 12:00 AM ADDED : ஜூன் 05, 2021 01:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசு சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்த நிலையில் தமிழக அரசு இது குறித்து பல தரப்பினரிடமும் கருத்து கேட்கிறது. 
பிளஸ் 2 பொதுத் தேர்வு வேண்டுமா… வேண்டாமா என்பது குறித்து சிவகங்கை ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் இங்கே மனம் திறக்கின்றனர்:
தேர்வு அவசியம்

பி.ஜான்சி, மாவட்ட தலைவர் (மகளிரணி), தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், சிவகங்கை: 

கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். அதே நேரம் பிளஸ் 2 அரசு பொது தேர்வை தாமதமானாலும் நடத்தியே ஆக வேண்டும். ஏனென்றால் அரசு பள்ளி மாணவர்கள் தாங்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வியை பெற முடியும். இவர்களால் கல்லுாரிகளில் பணம் செலவழித்து உயர்கல்வி பெற முடியாது. தேர்வு நடத்தாமல் போனால், அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி கனவு நிறைவேறாமல் போய்விடும். அரசு இதனை மனதில் வைத்து தேர்வை நடத்தியே ஆக வேண்டும்.
உயர்கல்வி பாதிக்கும்


பி.சுபிக் ஷா, ஆக்ஸ்போர்டு மகளிர் பள்ளி, சிவகங்கை: 

கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தேர்வு நடத்த சாத்தியமில்லை. ஏற்கனவே பிளஸ் 1 அரசு பொது தேர்வு எழுதிவிட்டோம். பிளஸ் 2 வில் திருப்புதல் தேர்வு நடந்துள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு மதிப்பெண் வழங்கலாம். தேர்வு நடத்தினால் அதற்கான கால அவகாசம் அதிகரிக்கும். உயர்கல்விக்கு செல்வதில் பாதிப்பு ஏற்படும். உயிரா, கல்வியா என வரும்போது உயிர் தான் முக்கியம். தேர்வு நடத்தினால் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரவல் அதிகரிக்கும். தற்போதைய சூழலில் தேர்வு அவசியமில்லை.
பிளஸ் 1 மதிப்பெண் போதும்


எஸ்.தாமரைச்செல்வி, பெற்றோர், சிவகங்கை: 

கொரோனா வால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. மத்திய அரசே நிலைமையை அறிந்து சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வை ரத்து செய்துள்ளது. இதனை பின்பற்றியே சில மாநிலங்களும் தேர்வை ரத்து செய்துள்ளது. இந்தாண்டு தேர்வு நடத்தாவிட்டால், மாணவர்கள் பாதிக்க போவதில்லை. பிளஸ் 1 அரசு பொது தேர்வு மதிப்பெண்ணை கணக்கிட்டு, உயர்கல்விக்கான கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்து, புதிய கல்வி ஆண்டை துவக்கலாம்.
மாதிரி தேர்வு மதிப்பெண் போதும்


கே.செண்பகபிரவீன்குமார், அரசு மேல்நிலைபள்ளி, திருப்புவனம்: 

தற்போதைய சூழலில் தேர்வு நடந்தால் மேலும் கொரோனா பரவ வாய்ப்புண்டு. சமீபத்தில் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வு நடத்தினர். அதனை அடிப்படையாக வைத்து பிளஸ் 2 மதிப்பெண் வழங்கலாம். தேர்வுக்காக தினமும் வீட்டை விட்டு பொது இடங்களுக்கு வரும்போது, தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. சில பாடங்கள் எழுதும் போதே கொரோனா உறுதியானால், எஞ்சிய பாடத்தை எப்படி எழுத முடியும்.
கல்வித்தரம் பாதிக்க கூடாது


எஸ்.கோபி, அரசு மேல்நிலை பள்ளி, சதுர்வேதமங்கலம்: 

ஒன்றரை ஆண்டாக ஆன்லைன் மூலம் அனைத்து பாடங்களையும் படித்தது திருப்தியாக இல்லை. இந்நிலையில் பொது தேர்வு நடத்தினால் சராசரி மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும். எனவே தேர்வு நடத்தாமல் வேறு ஏதாவது வழிமுறையில் மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். நன்றாகப் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படாமல், மாணவர்களின் விருப்பம் மற்றும் தகுதிக்கேற்ற கல்லூரி படிப்புகளை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டு விடாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாமதமாக நடத்தலாம்


எஸ்.ஹரிணி ஸ்ரீ, குட்வில் மெட்ரிக் பள்ளி, மானாமதுரை: 

தேர்வினை பாதுகாப்புடன் நடத்த வேண்டும். கொரோனா உயிர்பலி அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர். ஆன்லைனில், ஆசிரியர்கள் எடுத்த பாடத்தை வைத்து தேர்வுக்கு தயாராக தான் இருக்கிறோம். பிளஸ் 2 மதிப்பெண் தான் அடுத்து உயர்கல்வி செல்வதற்கான படிக்கல்லாக எங்களுக்கு அமைகிறது. எனவே அரசு பொது தேர்வை ரத்து செய்யாமல், கொரோனா பரவல் சூழலை அறிந்து நடத்தியே ஆக வேண்டும்.
ரத்து செய்வது அவசியம்


பி.பரமசிவம், பெற்றோர், மானாமதுரை: 

தற்போதைய சூழலில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது தான் நல்லது. மாணவர்கள் உடல், மன நலத்துடன் இருந்தால் தான், தைரியமாக தேர்வினை எழுத முடியும். இச்சூழலில் தேர்வை நடத்தி, மாணவர் சமுதாயத்திற்கும் கொரோனா பரவினால், எதிர்கால சந்ததிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே அரசு பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
எட்டக்கனியாகும் உயர்கல்வி


செந்தில்குமார், ஆசிரியர், காரைக்குடி: 

கண்டிப்பாக தேர்வு நடத்த வேண்டும். அப்போது தான் சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும். தேர்வு நடத்தாவிடில், கல்லுாரிகள் தனித்தனியாக நுழைவுத்தேர்வு நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். இதனால், உயர்கல்வி கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாகி விடும். தொற்று குறைந்ததும் தேர்வை நடத்தலாம்.
கொரோனா குறைந்ததும் தேர்வு


தி.சரண்யா, ஆசிரியை, காரைக்குடி: 

பிளஸ் 2 தேர்வு தான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும். தேர்வின்றி தேர்ச்சி என்பது மாணவர்களின் வேலைவாய்ப்பில் சிக்கல் ஏற்படுத்தும். உயர்கல்வி சேர்க்கையிலும் பல நடைமுறைகளை மாற்ற வேண்டியிருக்கும்.அனைத்து பாடங்களுக்கும் நுழைவுத்தேர்வு நடத்துவது அவசியமாகிவிடும். தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே, தொற்று குறைந்தவுடன் தேர்வு நடத்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us