கல்லுாரி ஆன்லைன் வகுப்பு நெறிப்படுத்த குழு அமைப்பு
கல்லுாரி ஆன்லைன் வகுப்பு நெறிப்படுத்த குழு அமைப்பு
UPDATED : ஜூன் 06, 2021 12:00 AM
ADDED : ஜூன் 06, 2021 08:50 AM
சென்னை:
கல்லுாரிகளில், &'ஆன்லைன்&' வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்து, கல்லுாரி கல்வி இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் இடையே பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் சிலவற்றில், ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் சிலர் பாலியல் ரீதியான கருத்துகளை பகிர்ந்ததாக, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் நெறிமுறைகள், புதிதாக தயார் செய்யப்பட்டுள்ளன. கல்லுாரி மாணவர்களுக்கும், ஆன்லைன் வகுப்புகளை நெறிப்படுத்தும் வழிகாட்டு முறைகளை தயாரிக்க, உயர் கல்வித்துறை சார்பில், புதிதாக குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவில், கல்லுாரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் தலைமையில், ஏழு பேர் உள்ளனர். இந்த குழு, வரும் 11ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
