தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை மத்திய பல்கலையாக மாற்ற வழக்கு

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை மத்திய பல்கலையாக மாற்ற வழக்கு

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை மத்திய பல்கலையாக மாற்ற வழக்கு


UPDATED : ஜூன் 06, 2021 12:00 AM

ADDED : ஜூன் 06, 2021 08:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2021 12:00 AM ADDED : ஜூன் 06, 2021 08:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு போதிய நிதி ஒதுக்கி, மத்திய பல்கலையாக மாற்ற தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி கடம்பூர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:

டில்லி தேசிய சமஸ்கிருத ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்திற்கு 2017-20 வரை ரூ.643.84 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, அந்தமான், இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் தமிழ் அலுவல் மொழியாக உள்ளது. உலகில் 9 கோடிப் பேருக்கு தாய்மொழி, 5 கோடி பேருக்கு பேச்சு மொழியாக தமிழ் உள்ளது. சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு மத்திய அரசு 2017-20 வரை ரூ.22.94 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழை மத்திய அரசு புறக்கணிப்பதற்கு இது உதாரணம்.
சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் ரூ.1000 கோடி ஒதுக்க வேண்டும். அதில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதை மத்திய பல்கலையாக மாற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு செல்வகுமார் குறிப்பிட்டார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு மத்திய மனிதவளம் மற்றும் நிதித்துறை செயலாளர்கள், மாநில தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் ஆக.,18ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us