தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வு தாக்கம் குறித்து 25 ஆயிரம் பேர் கருத்து: ஏ.கே.ராஜன்

நீட் தேர்வு தாக்கம் குறித்து 25 ஆயிரம் பேர் கருத்து: ஏ.கே.ராஜன்

நீட் தேர்வு தாக்கம் குறித்து 25 ஆயிரம் பேர் கருத்து: ஏ.கே.ராஜன்


UPDATED : ஜூன் 21, 2021 12:00 AM

ADDED : ஜூன் 21, 2021 07:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2021 12:00 AM ADDED : ஜூன் 21, 2021 07:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
நீட் தேர்வு தாக்கம் குறித்து இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 
இந்நிலையில், ஏ.கே.ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

நீட் தேர்வு தாக்கம் குறித்து 25 ஆயிரம் பேரிடம் இருந்து கருத்துகள் வந்துள்ளன. பெரும்பாலும் இ-மெயிலில் தான் கருத்துகள் வந்தன. அதில், சிலர் நீட் வேண்டும் எனவும், சிலர் வேண்டாம் எனவும், சிலர் குறிப்பிட்ட வருடங்களுக்கு மட்டும் நீட் வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அரசு நிர்ணயித்துள்ள வரம்புக்குள் கருத்துகளை திரட்டி வருகிறோம். அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்த பின்னர் எங்களது அறிக்கை இறுதி செய்யப்படும்.
அரசாணைப்படி முடிந்தளவு ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அவசியம் ஏற்பட்டால் கூடுதல் அவகாசம் கேட்போமா என்பது தெரியாது. நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது. ஒவ்வொருவரின் காரணம் வெவ்வேறாக உள்ளது. எங்கள் குழுவினர் சனி, ஞாயிறு கிழமைகளில் கூட பணியாற்றுகின்றனர். அரசின் விதிமுறைகளை தாண்டி எங்களது பரிந்துரைகள் இருக்காது, விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us