தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வி திட்டம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம்

சமச்சீர் கல்வி திட்டம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம்

சமச்சீர் கல்வி திட்டம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம்


UPDATED : நவ 14, 2009 12:00 AM

ADDED : நவ 14, 2009 04:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2009 12:00 AM ADDED : நவ 14, 2009 04:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சமச்சீர் கல்வி சட்டம் 2009 குறித்த மாநில அளவிலான கருத்தரங்கை மதுரை கிறித்தவ பேராலய மேல்நிலைக் கல்வி கமிஷன் மற்றும் லயோலா கல்வியியல் கல்லூரி இணைந்து இன்று நடத்தியது.


சென்னை லயோலா கல்வியியல் கல்லூரியில் நடந்த இதற்கான துவக்க விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக பள்ளி கல்வித் துறை இயக்குனர் விக்ரம் சகாய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கருத்தரங்கில் சமச்சீர் கல்வியின் சாதக, பாதகங்கள் குறித்து விளக்கப்பட்டன.


சமச்சீர் கல்வியை அமல்படுத்த அரசு தீவிரமாக உள்ளது. பொதுப்பாடத்திட்டத்தை கொண்டு வருவதோடு அரசு தன் பணி முடிந்துவிட்டதாக கருதுகிறது. ஆனால், பொதுப்பள்ளித் திட்டம், பயிற்றுமொழி, மழலையர் கல்வி, இலவசக் கல்வி, நிதி ஒதுக்கீடு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை மேம்படுத்துதல், தேர்வு சீர்திருத்தம், நிர்வாகச் சீர்திருத்தம் ஆகிய கூறுகளில் தேவையான சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்று கருத்தரங்கில் வழங்கப்பட்ட விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட கிறித்தவ பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us