பள்ளிகளில் கல்வித்தர மேம்பாடு: ‘ஐவர் குழு’ விவாதத்திற்கு உத்தரவு
பள்ளிகளில் கல்வித்தர மேம்பாடு: ‘ஐவர் குழு’ விவாதத்திற்கு உத்தரவு
UPDATED : நவ 14, 2009 12:00 AM
ADDED : நவ 14, 2009 05:04 PM
திண்டுக்கல்: பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த, தமிழகம் முழுவதும் குறுவள மையங்களில் ‘ஐவர் குழு’ விவாதம் நடத்தி அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், தமிழக பள்ளிகளில் கல்வித்தர மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், கிராம கல்விக்குழுக்களின் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் குறுவள மையங்களில் சிறப்பு கூட்டம் இன்று நடக்கிறது.
குறு வள மையத்திற்கு உரிய பள்ளிகளைச் சேர்ந்த ‘ஐவர் குழு’க்கள் பங்கேற்க உள்ளன. இக்குழுக்களில் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர், கிராம கல்விக்குழு தலைவர், ஒரு பெற்றோர் ஆகியோர் அடங்குவர்.
பள்ளியின் ஆண்டு திட்டம், வளர்ச்சிக்கு தடையாக உள்ள அம்சங்கள், இதை களைவதற்கு தேவையான நடவடிக்கைகள், தொடர் பராமரிப்பிற்கான செயல் முறைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்த விவாதம் குறித்த தகவல்களை அறிக்கையாக வழங்கும்படி அரசு உத்தரவிட்டு உள்ளது.
