தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரோஜா இதழ்களில் காந்தி, நேரு உருவப்படம்

ரோஜா இதழ்களில் காந்தி, நேரு உருவப்படம்

ரோஜா இதழ்களில் காந்தி, நேரு உருவப்படம்


UPDATED : நவ 14, 2009 12:00 AM

ADDED : நவ 14, 2009 05:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2009 12:00 AM ADDED : நவ 14, 2009 05:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மருத்துவக் கல்லூரி ஓவியர், ரோஜாப் பூவின் இதழ்களில் காந்தி, நேரு படத்தை பேனா மூலம் வரைந்து அசத்தியுள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் காணை அடுத்த அதனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (32). புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில் விளம்பர கலை படிப்பு முடித்துள்ளார். கண்ணன் தற்போது புதுச்சேரி மதகடிப்பட்டு மணக்குள வினாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சமுதாய பிரிவில் ஓவியராக பணிபுரிந்து வருகிறார்.


சிறு வயதில் இருந்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கண்ணனிடம் இருந்தது. ஓய்வு நேரங்களில் புதிய முயற்சியாக ஓவியங்களை வரையத் துவங்கினார். அரிசியில் பெயிண்ட் மூலம் முதல்வர் கருணாநிதி படம், மாத்திரையில் தேசத் தலைவர்கள் படம், சாக்பீசில் சிற்பம், வெற்றிலையில் இயற்கை காட்சிகளை வரைந்து பலரது பாராட்டுக்களை பெற்றதுடன்  பரிசும் பெற்றுள்ளார்.


குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சிவப்பு நிற ரோஜா மலரில் நேரு மற்றும் சமாதான புறா படமும், வெள்ளை நிற ரோஜா மலரின் இதழில் காந்தி, நேரு பேசுவது போன்றும் பேனாவில் வரைந்து அசத்தியுள்ளார். காணை அரசு மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் கஜேந்திரன், மணக்குள வினாயகா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜகோவிந்தன், சேர்மன் கேசவன், துணை சேர்மன் சுகுமாறன், மேனேஜிங் இயக்குனர் தனசேகரன் ஆகியோர் அளித்து வரும் ஆதரவால் இத்தகைய சாதனைகளை நிகழ்த்த முடிந்தது என கண்ணன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us