UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM
ADDED : ஜூன் 24, 2021 08:07 AM
அ நிறம் | அளவு
சென்னை:
மத்திய - மாநில அரசுகளின் சார்பில் நடத்தப்படும், ஆசிரியர் தகுதி தேர்வுகளின் சான்றிதழ்கள், ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பது, சமீபத்தில் மாற்றப்பட்டது.
அதற்கு பதிலாக, ஆயுள் முழுமைக்கும் செல்லும் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பில், &'மத்திய ஆசிரியர் தகுதி தேர்வான &'சிடெட்&' முடித்தவர்களின் சான்றிதழ்கள், அவர்களின் ஆயுள் காலம் முழுதும், பணியில் சேர செல்லத் தக்கது. &'ஏற்கனவே தேர்வு எழுதியவர்களுக்கு, புதிய சான்றிதழ் எதுவும் வழங்கப்படாது&' எனக் கூறப்பட்டுள்ளது.
