தனியார் பள்ளிகளின் மீது புகார்; கல்வி உரிமை கூட்டமைப்பு மனு
தனியார் பள்ளிகளின் மீது புகார்; கல்வி உரிமை கூட்டமைப்பு மனு
UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM
ADDED : ஜூன் 24, 2021 08:14 AM
பொள்ளாச்சி:
&'தனியார் பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்,&' என, மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில், கல்வி கட்டண முறைகேடு நடப்பதால் அதை தடுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டு, தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிடாமல், அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.
இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை கட்ட சொல்லி பெற்றோரிடம் வற்புறுத்துகின்றனர். கொரோனா காலத்தில், நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தில், 75 சதவீத கட்டணத்தை இரண்டு தவணையாக கட்டலாம் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.
