பிளஸ் 2 தேர்வை நடத்த அனுமதி கேட்கும் ஆந்திர மாநிலம்
பிளஸ் 2 தேர்வை நடத்த அனுமதி கேட்கும் ஆந்திர மாநிலம்
UPDATED : ஜூன் 24, 2021 12:00 AM
ADDED : ஜூன் 24, 2021 08:21 AM
புதுடில்லி:
&'வேறு மாற்று வழி இல்லாததால், பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயமாகிறது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம். தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும்&' என, உச்ச நீதிமன்றத்தில், ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மாநில கல்வி வாரிய தேர்வுகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஆந்திர அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது கொரோனா வைரஸ் பரவல் மாநிலத்தில் குறைவாகவே உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர் களுக்கு, &'கிரேடு&' முறையே வழங்கப்படுகிறது. அதனால், முந்தையத் தேர்வுகள் அடிப்படையிலோ, பள்ளி அளவில் நடந்த தேர்வுகள் அடிப்படையிலோ, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க முடியாது. மாணவர் நலன் கருதி, தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும்.
ஏற்கனவே, செய்முறை தேர்வுகள் முடிந்து விட்டன. ஜூலை இறுதி வாரத்தில் இருந்து தேர்வு நடத்த திட்டமிட்டு உள்ளோம்.போதிய கொரோனா பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இது, இன்று விசாரிக்கப்பட உள்ளது.
