தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆகஸ்ட்டில் கல்லூரி அட்மிஷன்: அமைச்சர் அறிவிப்பு

ஆகஸ்ட்டில் கல்லூரி அட்மிஷன்: அமைச்சர் அறிவிப்பு

ஆகஸ்ட்டில் கல்லூரி அட்மிஷன்: அமைச்சர் அறிவிப்பு


UPDATED : ஜூன் 28, 2021 12:00 AM

ADDED : ஜூன் 28, 2021 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2021 12:00 AM ADDED : ஜூன் 28, 2021 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து முதல்வருடன் நானும், உயர் கல்வித்துறைச் செயலர்களும் கலந்து பேசினோம். பிளஸ் 2 மதிப்பெண்களைக் கணக்கிடும் பணி நடைப்பெற்று கொண்டிருக்கிறது. விரைவில் அது முடிவடையும். 
ஆகவே பிளஸ் 2 தமிழக மாநில வழிக்கல்வியில் படித்த மாணவர்கள், சிபிஎஸ்இ வழியில் படித்த மாணவர்கள் மதிப்பெண் அனைத்தும் ஜூலை 31-ம் தேதிக்குள் இறுதிப்படுத்தப்பட்டுவிடும். கல்லூரி மாணவர்கள் சேர்க்கை என்பது ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகுதான் தனியார், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
சில தனியார் கல்லூரிகளில் சேர்க்கை நடக்கிறது என்று தகவல் வருகிறது. அவ்வாறு செய்யக் கூடாது. சிபிஎஸ்இ மதிப்பெண், மாநிலக் கல்வி வழியில் பயின்ற மாணவர்களின் மதிப்பெண் வந்தபின்தான், ஆகஸ்டு 1ம் தேதிக்குப் பின்தான் கல்லூரிகளில் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு உத்தரவாகத் தெரிவித்துள்ளார். ஆகவே ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்துதான் சேர்க்கை தொடங்கும். அதையும் மீறி சேர்க்கை நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 
கூடுதல் மதிப்பெண் பெறத் தேர்வு எழுதுபவர்களுக்காக சேர்க்கை நிறுத்தப்படாது. அதற்கு வாய்ப்பில்லை. உயிர்தான் முக்கியம், மற்றதெல்லாம் பிறகுதான் என்பதால் காலதாமதம் ஆகிறது. வழக்கமாக ஜூலையில் கல்லூரி ஆரம்பிக்கும், இம்முறை ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கும் அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us