தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலை அரியர் தேர்வு நடத்துவதில் குழப்பம்

வேளாண் பல்கலை அரியர் தேர்வு நடத்துவதில் குழப்பம்

வேளாண் பல்கலை அரியர் தேர்வு நடத்துவதில் குழப்பம்


UPDATED : ஜூன் 28, 2021 12:00 AM

ADDED : ஜூன் 28, 2021 06:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2021 12:00 AM ADDED : ஜூன் 28, 2021 06:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 அரசு கல்லுாரி, 28 தனியார் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில், 10 பாடப்பிரிவுகளில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இம்மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள், தற்போது நடந்து வருகின்றன. ஆனால், &'அரியர்&' தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை. 
கடந்த, 2017ம் ஆண்டு சேர்க்கை புரிந்து, தற்போது இறுதியாண்டில் உள்ள மாணவர்களுக்கு, ஆக.,- செப்., மாதத்துடன் பட்டப்படிப்புக்கான கால அவகாசம் முடிகிறது. இம்மாணவர்களுக்கு, கடந்த கல்வியாண்டில் இருமுறை, நடப்பு கல்வியாண்டில் ஒரு முறை என, அரியர் தேர்வு எழுத மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அரியர் தேர்வுகள் ஏதும் இதுவரை நடத்தப்படாமல் உள்ளன. ஜூலை 2ம் வாரம் மூன்று, நான்காம் பருவதிற்கான அரியர் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக, பல்கலை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஐந்து, ஆறாம் பருவத்துக்கான அரியர் தேர்வு எப்போது நடக்கும் என்பது கேள்விக்குறியே. ஜூலை மாதத்தில் நடக்கும் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, மீண்டும் அரியர் வாய்ப்பு உடனடியாக கிடைக்காது என்பதால், பலமாணவர்கள் குறிப்பிட்ட காலத்தில் பட்டப்படிப்பு முடிக்க முடியாத சூழல் எழுந்துள்ளது.

&'கொரோனாவால் தொய்வு&'


பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த, 2020 மார்ச் மாதம் கொரோனா காரணமாக பல்கலை மூடப்பட்டு நவ., மாதம் திறக்கப்பட்டது. 2016ல் சேர்ந்த இறுதியாண்டு மாணவர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் பட்டப்படிப்பை முடிக்க, அனைத்து பணிகளையும் மேற்கொண்டோம். அதே சமயம், 2017ல் சேர்ந்த மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்பு, தேர்வுகளை நடத்தினோம்.
இறுதியாண்டு மாணவர்களை கவனத்தில் கொண்டதால், 2017ல் வகுப்பில் சேர்ந்த மூன்றாமாண்டு மாணவர்களுக்கு (2021ல் இறுதியாண்டு) அரியர் தேர்வுகள், நவ-டிச., மாதம் நடத்தாமல், 2021ஏப்., மாதம் நடத்த திட்டமிட்டோம். ஆனால், கடந்த ஏப்., மே மாதம் தேர்தல் பணிகளில் அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக, பல்கலை மூடப்பட்டதால் மீண்டும் தாமதம் ஏற்பட்டது.
தேர்வு, மதிப்பீட்டு பணிகள் என்பது எளிதானது அல்ல; அதிக அவகாசம் தேவைப்படும். கொரோனா காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இறுதியாண்டு மாணவர்களுக்கு, அரியர் தேர்வுகள் அனைத்தும் உடனடியாக நடத்தி முடிக்க பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம். மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
&'சாப்ட்வேர்&' சிக்கல்

வேளாண் பல்கலை தரப்பில், &'ஆன்லைன்&' தேர்வு &'சாப்ட்வேர்&' உரிமத்துக்கான காலஅவகாசம் முடிந்துள்ளது. மீண்டும், புதிய சாப்ட்வேர் நடைமுறைப்படுத்துவதில் எழுந்த காலதாமதமே இச்சிக்கல்களுக்கு முக்கிய காரணம் என சில பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். புதிய சாப்ட்வேர் டெண்டர் நடைமுறை காலதாமதம் ஆவது தெரிந்தவுடன், வேறு ஆன்லைன் முறையில் பிற கல்லுாரிகள் போன்று, தேர்வுகளை நடத்த திட்டமிட்டு இருந்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள். 
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திலும் போதுமான பணியாளர்கள் இல்லை. பிற கலை, அறிவியல், பொறியியல் பல்கலை போன்று அரியர் தேர்வுகள் நடத்த, சரியான அணுகுமுறையை வேளாண் பல்கலை வகுக்கவேண்டியது அவசியம். வழக்கமாக, தேர்வு கட்டுப்பாட்டு துறை நிர்ணயிக்கும் சமயங்களில் தேர்வு வைப்பதே, இதுபோன்ற குழப்பங்களுக்கு காரணமாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us