தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போலி மதிப்பெண் சான்றிதழ் ஆசிரியர் மீது வழக்கு பதிவு

போலி மதிப்பெண் சான்றிதழ் ஆசிரியர் மீது வழக்கு பதிவு

போலி மதிப்பெண் சான்றிதழ் ஆசிரியர் மீது வழக்கு பதிவு


UPDATED : ஜூன் 28, 2021 12:00 AM

ADDED : ஜூன் 28, 2021 07:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2021 12:00 AM ADDED : ஜூன் 28, 2021 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து, அரசு பள்ளியில் பணிக்கு சேர்ந்த ஆசிரியர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தொம்பரகாம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம், 51; இவர், குட்டூர் அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றும் பள்ளி ஆசிரியர்களின் மதிப்பெண் சான்றிதழை அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
இதில், மகாலிங்கம் பிளஸ் 2 தேர்வில் 580 மதிப்பெண் மட்டும் எடுத்திருந்த நிலையில், பணியில் சேர்வதற்காக மதிப்பெண் சான்றிதழில், 972 மதிப்பெண் என திருத்தி, கடந்த 1990ல் பணிக்கு சேர்ந்துள்ளது தெரிந்தது.இதையடுத்து, தர்மபுரி டி.இ.ஓ., பாலசுப்பிரமணி எஸ்.பி., அலுவலகத்தில்புகார் தெரிவித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us