தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண்மை தொலைதூரக்கல்வி பாடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

வேளாண்மை தொலைதூரக்கல்வி பாடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

வேளாண்மை தொலைதூரக்கல்வி பாடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 28, 2021 12:00 AM

ADDED : ஜூன் 28, 2021 07:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2021 12:00 AM ADDED : ஜூன் 28, 2021 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
வேளாண்மை தொலைதூரக்கல்வி பாடங்களில், தொழில் முனைவோர்கள் சேர விண்ணப்பிக்கலாம். இது குறித்து, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூரில், அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர்.
முத்துகிருஷ்ணன் மற்றும் கோவை வேளாண்மை பல்கலை தொலைதூர கல்வி இயக்குனர் டாக்டர்.ஆனந்தன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: 

தொலைதூரக்கல்வி முறையில் முதுநிலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. வேளாண் இடுபொருள் வணிகர்கள் மற்றும் 10ம் வகுப்பு தேறிய, தவறியவர்கள் வேளாண் பட்டய படிப்பில் சேரலாம். சான்றிதழ் படிப்புகளான துல்லிய கரும்பு சாகுபடி, காளான் வளர்ப்பு, அங்கக வேளாண்மை, மண்புழு உரம் தயாரித்தல், நாற்றங்கால் உற்பத்தி, காய்கறி விதை உற்பத்தி, மலர் சாகுபடி மற்றும் கால்நடை தீவன உற்பத்தி போன்ற படிப்புகளுக்கு, 2021-22ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. 
இப்படிப்புகளில் சேர விரும்பும் திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் விருதாச்சலம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், www.tnau.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கட்டணத்தை இணையதளம் வழியாகவே செலுத்தலாம். 
கூடுதல் விபரங்களுக்கு, 94862 57548, 94424 07460 மற்றும், 044-6611229 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us