தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் ஆய்வுக்கு நீதிபதி குழு எதிர்த்து பா.ஜ., வழக்கு

நீட் ஆய்வுக்கு நீதிபதி குழு எதிர்த்து பா.ஜ., வழக்கு

நீட் ஆய்வுக்கு நீதிபதி குழு எதிர்த்து பா.ஜ., வழக்கு


UPDATED : ஜூன் 29, 2021 12:00 AM

ADDED : ஜூன் 29, 2021 01:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2021 12:00 AM ADDED : ஜூன் 29, 2021 01:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: &'நீட்&' தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பா.ஜ., பிரமுகர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனு: 

மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான, &'நீட்&' தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது. மருத்துவ கமிஷன்இதற்கான அரசாணை, ஜூன் 10ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
தேசிய மருத்துவ கமிஷன் சட்டத்தை, மத்திய அரசு இயற்றியுள்ளது. மருத்துவ கல்வியில் தரத்தை மேம்படுத்த, இந்த சட்டம் வழிவகுக்கிறது. மருத்துவ ஆலோசனை கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ கமிஷன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தேசிய மருத்துவ கமிஷன் முன், மருத்துவக் கல்வி குறித்த, எந்த பரிந்துரையையும் அளிக்கலாம். மருத்துவ ஆலோசனை கவுன்சில் வாயிலாக, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கருத்து தெரிவிக்கலாம்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை, தமிழக அரசு நியமித்துள்ளது. சட்டப்படி, இது அனுமதிக்கத்தக்கது அல்ல; அதிகாரத்தை மீறும் வகையில், மாநில அரசு செயல்படுகிறது. இந்தக் குழு அமைப்பதால், வீண் செலவு தான் ஏற்படும்.பல்வேறு ஆய்வுகள், நீதிமன்ற உத்தரவுகள் வாயிலாக தான், பொது நுழைவு தேர்வு வந்து உள்ளது.
நான்கு ஆண்டுகள்


இதை, அரசியல் பிரச்னையாக, மாநில அரசு ஆக்கக் கூடாது; மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது. நான்கு ஆண்டுகளாக, நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான மாணவர்கள், தேர்வுக்கு தயாராக ஆரம்பித்து விட்டனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீட்டை, அரசு வழங்கி உள்ளது.எனவே, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நியமனம் தொடர்பான நடவடிக்கைக்கு, தடை விதிக்க வேண்டும்; அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us