நேர்முக தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; அன்புமணி கோரிக்கை
நேர்முக தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்; அன்புமணி கோரிக்கை
UPDATED : ஜூன் 29, 2021 12:00 AM
ADDED : ஜூன் 29, 2021 01:29 PM
சென்னை:
&'முறைகேடுகளை தவிர்க்க, ஆந்திர அரசு பாணியில், தமிழகத்திலும் அரசு பணிகளுக்கான நேர்முக தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்&' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
ஆந்திராவில், அரசு பணியாளர் தேர்வில், வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளை தடுக்கவும், குரூப் - 1 பணிகள் உள்ளிட்ட, அனைத்து அரசு பணிகளுக்கும் நடத்தப்பட்டு வந்த நேர்காணல், ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, வரவேற்கத்தக்க முடிவு. தமிழகத்திலும், அரசு பணிகளுக்கான நேர்காணலில், பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக, தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனவே, அனைத்து நிலை அரசு பணிகளுக்கும், நேர்காணலை ரத்து செய்ய, தமிழக அரசு முன் வர வேண்டும்.
எழுத்து தேர்வுகளின் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், அனைத்து பணிகளுக்கும், தகுதியானவர்களை தேர்வு செய்வதே சரியாக இருக்கும்.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.
