UPDATED : ஜூலை 02, 2021 12:00 AM
ADDED : ஜூலை 02, 2021 04:35 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு:
&'&'பட்டபடிப்பு மாணவர்கள், கொரோனா தடுப்பூசி பெறுவது கட்டாயமல்ல,&'&' என துணை முதல்வர் அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.
பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:
கல்லுாரி மாணவர்கள், வகுப்புகளுக்கு செல்லும் முன், கொரோனா தடுப்பூசி போட வேண்டுமென்ற விதிமுறை இருந்தது. தற்போது தடுப்பூசி கட்டாயமல்ல. மாநிலத்தில் ஏற்கனவே, கல்லுாரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
இதுவரை 94 ஆயிரம் மாணவர்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள், அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கும், தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
