தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மத்திய அரசின் ஐ.சி.டி., விருது தமிழக ஆசிரியர்கள் தேர்வு

மத்திய அரசின் ஐ.சி.டி., விருது தமிழக ஆசிரியர்கள் தேர்வு

மத்திய அரசின் ஐ.சி.டி., விருது தமிழக ஆசிரியர்கள் தேர்வு


UPDATED : ஜூலை 02, 2021 12:00 AM

ADDED : ஜூலை 02, 2021 04:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2021 12:00 AM ADDED : ஜூலை 02, 2021 04:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மத்திய அரசின் ஐ.சி.டி., என்ற தகவல் தொழில்நுட்ப செயல்பாட்டு விருதுக்கு, தமிழகத்தில் இருந்து ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு நவீன முறை கற்றலை ஊக்குவிக்கும் வகையில், ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி., விருதுகளை, மத்திய அரசு வழங்கி வருகிறது. 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கான, ஐ.சி.டி., விருதுகளின் பட்டியலை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி., வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இருந்து ஆறு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டோர் விபரம்: சிவகங்கை மாவட்டம், மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் செந்தில் செல்வன். கணித பாடத்தை, தகவல் தொழில்நுட்ப முறையில் கற்பித்தவர்
* சேலம் மாவட்டம், பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் தங்கராஜா மகாதேவன். சூழலியல் சார்ந்த பாடங்களை, &'அனிமேஷன்&' முறையில் உருவாக்கியுள்ளார்
* சேலம் மாவட்டம், வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியர் இளவரசன். &'க்யூஆர் கோடு&' முறையில் பாடங்களை உருவாக்கினார். பல்வேறு நாட்டு மாணவர்களை தகவல் தொழில்நுட்பத்தில் இணைத்து, தங்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட செய்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு விருதுக்கு, மூன்று ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விபரம்:
* திருவாரூர் மாவட்டம், கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கணேஷ். இவர் தகவல் தொழில்நுட்ப வீடியோக்கள், விளையாட்டுகள் வழியாக பாடங்களை நடத்திஉள்ளார்
* கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி ஆசிரியர் மனோகர் சுப்ரமணியம். இவர், க்யூஆர் கோடு முறையில், மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளார்
* திருப்பூர் மாவட்டம், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் தயானந்த். இவர், அனிமேஷன் முறையில் பாடங்களை நடத்தியவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us