தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு ரத்து குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு ரத்து குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு ரத்து குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு


UPDATED : ஜூலை 07, 2021 12:00 AM

ADDED : ஜூலை 07, 2021 06:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2021 12:00 AM ADDED : ஜூலை 07, 2021 06:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பி.யூ.சி., தேர்வு ரத்து செய்தது போன்று, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த சிங்க்ரேகவுடா என்பவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று பொது நல மனு தாக்கல் செய்தார்.
கொரோனாவால் பி.யு.சி., முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. பி.யு.சி., இரண்டாம் ஆண்டின் மறுதேர்வர்களும் தேர்வின்றி &'ஆல் பாஸ்&' செய்யப்படுவதாக, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எஸ்.எஸ்.எல்.சி., யில் கணிதம், விஞ்ஞானம், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கு, ஒரே தேர்வாக வரும், 19 லும்; மூன்று மொழி பாடங்களுக்கு, வரும், 22 லும் தேர்வு நடத்தப்டவுள்ளன. மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்களும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், பி.யு.சி., தேர்வு ரத்து செய்தது போன்று, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று சிங்க்ரேகவுடா என்பவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், கர்நாடகாவில் மட்டும் நடத்த முற்பட்டிருப்பது சரியில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு நடத்த முற்பட்ட ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால், உடனே தேர்வை ரத்து செய்தது அம்மாநில அரசு.எனவே கர்நாடக உயர்நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பு வழங்கும் என்று மாணவர்கள், பெற்றோரிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us