தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி... தருது மனிதநேய மையம்

ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி... தருது மனிதநேய மையம்

ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி... தருது மனிதநேய மையம்


UPDATED : ஜூலை 11, 2021 12:00 AM

ADDED : ஜூலை 11, 2021 09:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2021 12:00 AM ADDED : ஜூலை 11, 2021 09:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., தேர்விற்கு, சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகம் சார்பில், இணையவழியில், இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.

பயன்பாடு


இதுகுறித்து, மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி அறிக்கை: 

தற்போது, ஐ.ஏ.எஸ்., தேர்வுகளின் பாடத்திட்டத்தை முழுதும் சேர்த்து, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பங்களிப்புடன், இணைய வழி பயிற்சி வகுப்புகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.பாடங்களை நேரடி வகுப்புகளில் கவனிப்பது போன்ற உணர்வு ஏற்படும். இணைய வழியில், எந்த நேரத்திலும் கவனிக்கவோ, பார்க்கவோ முடியும்.விரைவில் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மட்டுமின்றி, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
&'பதிவு செய்யுங்க&'கல்லுாரி பயிலும் காலத்திலேயே, ஐ.ஏ.எஸ்., பயிற்சியையும் சிரமமின்றி பெறும் வகையில், இணைய வகுப்புகள் நடக்கும்.மனிதநேய இலவச கல்வி மையத்தின், www.mntfreeias.com என்ற இணையதளத்தில், தங்களது சுய விபரங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக, &'யூசர் ஐ.டி., - பாஸ்வேர்டு&' அனுப்பப்படும்.அதை பயன்படுத்தி பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். &'கொரோனா&' பேரிடர் காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பாகவும், செலவு இல்லாமலும் வீட்டில் இருந்தபடியே தரமான பயிற்சியை பெற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us