பி.யு.சி., தேர்வு முடிவுகள் வரும் 20க்குள் வெளியீடு
பி.யு.சி., தேர்வு முடிவுகள் வரும் 20க்குள் வெளியீடு
UPDATED : ஜூலை 11, 2021 12:00 AM
ADDED : ஜூலை 11, 2021 09:32 AM
பெங்களூரு:
&'&'மாணவர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும், இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்வு முடிவுகள், வரும் 20க்குள் வெளியாகும்,&'&' என தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.
பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:
இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்வு முடிவுகள், ஜூலை 20க்குள், வெளியாகும். நடப்பாண்டு மாணவர்கள், எந்த இடையூறும் இன்றி கல்வியை தொடர, கல்வி வல்லுனர், அதிகாரிகள், பெற்றோர், தனியார் கல்வி நிறுவனங்களின் தலைமையில், செயற்படை அமைக்கப்படும். கிராம பஞ்சாயத்து நுாலகங்களில், தொலைக்காட்சி பெட்டிகள் வைத்து, அதன் மூலம் மாணவர்களுக்கு, பாடம் கற்பிக்க ஆலோசிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, கிராம அபிவிருத்தித்துறை அதிகாரிகளுடன், பேச்சு நடந்துள்ளது. வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி இல்லாத மாணவர்களுக்கு, உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
