தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் விவகாரத்தில் வாய் வீரம் காட்டிய ஸ்டாலின்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

நீட் விவகாரத்தில் வாய் வீரம் காட்டிய ஸ்டாலின்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

நீட் விவகாரத்தில் வாய் வீரம் காட்டிய ஸ்டாலின்: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு


UPDATED : ஜூலை 15, 2021 12:00 AM

ADDED : ஜூலை 15, 2021 06:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2021 12:00 AM ADDED : ஜூலை 15, 2021 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆட்சிக்கு வந்த, 24 மணி நேரத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம்; அதற்கான வழி எங்களுக்கு தெரியும் என்று வாய் வீரம் காட்டிய ஸ்டாலின், தற்போது தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக, என் மீது பழி சுமத்தி உள்ளார் என, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தேர்தல் பிரசாரத்தின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தே, நீட் தேர்வு ரத்து என்பது தான் என்று, தி.மு.க., கூறியது. அதற்கான வழிமுறைகள், ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும் என, வெற்று முழக்கமிட்டனர். மக்களை திசை திருப்பி, வெற்றியும் பெற்று விட்டனர்.
தற்போது, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், &'நீட்&' தேர்வினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து அறிய குழு அமைத்துள்ளனர். &'இக்குழு, உச்ச நீதிமன்றத்தின் வரம்புக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளது&' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு தி.மு.க., அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், &'நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மட்டுமே, இந்தக் குழு ஆராயும். இந்தக் குழுவின் பரிந்துரை, நீட் தேர்வு நடக்க எவ்விதமான இடையூறையும், பாதிப்பையும் ஏற்படுத்தாது. &'இது, அரசின் கொள்கை முடிவு. இதற்கு எதிராக யாரும் மனு தாக்கல் செய்ய முடியாது. இந்தக் குழுவால், மனுதாரர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை&' என தெரிவித்திருந்தது.
இதை ஏற்று, அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீட் தேர்வை ரத்து செய்ய, குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில், எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ராஜன் குழுவிற்கு எதிரான மனு தள்ளுபடியான நிலையில், தமிழகத்தில் &'நீட்&' தேர்வை ரத்து செய்து விட்டதுபோல, ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் நேரத்தில், &'ஆட்சிக்கு வந்த, 24 மணி நேரத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய, நடவடிக்கை எடுப்போம். அதற்கான வழி எங்களுக்கு தெரியும்&' என, வாய் வீரம் காட்டிய ஸ்டாலின், தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக, என் மீது பழி சுமத்தி உள்ளார்.
முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பேச்சை நம்பி, நீட் ஒழிந்து விடும் என்று, தேர்வுக்கு தயாராகாத மாணவர்கள் மத்தியில், செப்., 12ல், நீட் தேர்வு நடக்கும் என்ற, மத்திய அரசின் அறிவிப்பு, அவர்கள் தலையில் இடிபோல் இறங்கியுள்ளது.
இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர், &'நீட் தேர்வுக்கான கல்வியை மாணவர்கள் கற்றுக் கொள்வது, நீட் தேர்வுக்கு பின்னும், மருத்துவரான பின்னரும், அவர்களுக்கு கை கொடுக்கும்&' என்ற அரிய விஞ்ஞான கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us