UPDATED : ஜூலை 17, 2021 12:00 AM
ADDED : ஜூலை 17, 2021 08:54 AM
சென்னை:
ஐ.டி.ஐ., என்ற தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அமைச்சர் கணேசன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகத்தில், உலக இளைஞர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குனர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்த விழாவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், &'வீடியோ கான்பரன்ஸ்&' வாயிலாக பங்கேற்றார்.
தொழிற்பயிற்சி நிலையங்களான, ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தவும் கேட்டுக் கொண்டார்.
&'படித்த இளைஞர்கள், வேலை தேடுவோருக்கு தமிழக திறன் மேம்பாட்டு கழகம் வழியே பயிற்சி அளித்து, அவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு உதவ வேண்டும்&' என்றும், அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், திறன் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் பிரகாஷ், இணை இயக்குனர் விஜயகுமார் பங்கேற்றனர்.
