தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வு; அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு

நீட் தேர்வு; அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு

நீட் தேர்வு; அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க ஏற்பாடு


UPDATED : ஜூலை 19, 2021 12:00 AM

ADDED : ஜூலை 19, 2021 10:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2021 12:00 AM ADDED : ஜூலை 19, 2021 10:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாகவே விண்ணபிக்கலாம், என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது ஜூலை 13ம் தேதி துவங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6 எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நீட் எழுத விரும்பும் மாணவர்கள் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வு எழுதும் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம் எனவும், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைந்து உரிய நடைமுறைகளை பின்பற்றி ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளை (ஜூலை 19) காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us