தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு புதுவித பயிற்சி

ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு புதுவித பயிற்சி

ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு புதுவித பயிற்சி


UPDATED : நவ 20, 2009 12:00 AM

ADDED : நவ 20, 2009 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2009 12:00 AM ADDED : நவ 20, 2009 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: “ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்களுக்கு சூரிய சக்தியினால் இயங்கும் கருவிகளை கையாளும் பயிற்சிகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என டில்லி புதுப்பிக்கதக்க எரிசக்தித் துறையின் இயக்குனர் சந்தராம் தெரிவித்துள்ளார்.


தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய நீராவி மூலம் சமையல் செய்வதற்காக சூரிய ஒளியை பயன்படுத்துதல் குறித்த கருத்தரங்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், சூரிய சக்தியை ஆக்க தியாக எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து, சூரிய சக்தி கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றவர்களுக்கு எடுத்துரைத்தனர்.


இந்நிகழ்ச்சியில் சந்தராம் பேசியதாவது:
தமிழக எரிசக்தி முகமை மட்டுமே, எரிசக்தி குறித்த முன்மாதிரியான கருத்தரங்குகளை நடத்துகிறது. இந்த கருத்தரங்குகள் மூலம் எரிசக்தியின் முக்கியத்துவத்தை மக்கள் உணர முடியும். சூரிய சக்தியை பயன்படுத்துவதால், மின்சாரத்தை சேமிக்க முடியும். நம் நாட்டில் சூரிய சக்தி அதிகமாக கிடைக்கிறது. வீட்டு பயன்பாட்டுக்கு எரிசக்தி உபயோகிப்பதில் அரியானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநில அரசு எரிசக்தி பயன்பாட்டிற்கு ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறது.


நாட்டிலேயே சூரிய சக்தியினால் இயங்கும் நீராவி கருவிகள் உபயோகத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நீராவி மூலம் சூரிய சக்தியை சமையலுக்கு பயன்படுத்துவது முக்கியம். நீராவி மூலம் சமைக்கும் அடுப்புகள் தற்போது மூன்று வகைகளில் விற்பனைக்கு வருகிறது. முதல் வகை நான்கு பேருக்கு சமைக்கும் விதத்திலும், இரண்டாவது வகை 40 முதல் 50 பேருக்கு சமைக்கும் விதத்திலும், மூன்றாம் வகை 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேருக்கு சமைக்கும் விதத்திலும் விற்பனைக்கு வருகிறது. இதில், மூன்றாம் வகை நீராவி அடுப்புகள் திருப்பதி மற்றும் ஷீரடி கோவில்களில் பயன்பாட்டில் உள்ளன.


அடுக்கு மாடி கட்டங்களை பொறுத்தவரை சூரிய சக்தியைக் கொண்டு வெயில் காலங்களில் உட்புறங்களை குளுமைப்படுத்த முடியும். குளிர் காலங்களில் வெப்பப் படுத்த முடியும். இதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சூரிய சக்தியால் இயங்கும் கருவிகளை கையாளும் ஆட்கள் பற்றாக்குறையால், கருவிகள் பழுதாகும்போது அதை பழுது நீக்குவது கடினமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, வரும் ஆண்டு முதல் ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் கருவிகளை கையாளும் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் கல்லூரிகளும் சூரிய சக்தி சார்ந்த பயிற்சிகள் கொடுக்க முன்வர வேண்டும்.


நிறைய நிறுவனங்கள் சூரிய சக்தி உபகரணங்கள் பயன்படுத்த வங்கிக் கடன் கிடைக்காமல் உள்ளன. அவர்களுக்கு எங்களிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் எங்களை அணுகினால் விவரம் பெறலாம். இவ்வாறு  சந்தராம்பேசினார்.


இந்த கருத்தரங்கில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர், தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் கிருத்துதாசு காந்தி மற்றும் பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள், எரிசக்தி மேம்பாட்டு முகமையின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us