தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தையல், ஓவியம், உடற்கல்வி ஆசிரியர் பணியிட விபரம் வெளியீடு

தையல், ஓவியம், உடற்கல்வி ஆசிரியர் பணியிட விபரம் வெளியீடு

தையல், ஓவியம், உடற்கல்வி ஆசிரியர் பணியிட விபரம் வெளியீடு


UPDATED : நவ 24, 2009 12:00 AM

ADDED : நவ 24, 2009 05:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2009 12:00 AM ADDED : நவ 24, 2009 05:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: தையல், ஓவியம்,இசை மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வெப்சைட்டில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள தையல் ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கு மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் பதிவுதாரர்களின் பட்டியல் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கல்வித் தகுதி பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்று தையல், ஓவியம் மற்றும் இசை ஆகிய பிரிவுகளில் தொழில் ஆசிரியர் பயிற்சி பெற்று (டி.டி.சி) பதிவு செய்திருக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சியுடன் உடற்கல்வி ஆசிரியர் கல்வியில் தேர்ச்சி பெற்று பதிவு செய்திருக்க வேண்டும். நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஓவியம், இசை மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கல்வித்தகுதியை 31.10.2009 வரை பதிவு செய்துள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


தையல் ஆசிரியை சான்று பதிவு செய்துள்ள ஆதி திராவிடர் 9.2.2004 வரையிலும், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 6.6.2006 வரையிலும், பிற்பட்ட வகுப்பினர் முஸ்லிம் 24.10.2002 வரையிலும், பிற்பட்ட வகுப்பினர் மற்றும் இதர வகுப்பினர் 25.4.2000 வரையிலும் பதிவு செய்தவர்கள் விபரங்கள் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.


முன்னுரிமை சான்று பதிவு செய்துள்ளவர்கள் (கலப்பு திருமணம், ஆதரவற்ற விதவை, ராணுவத்தை சார்ந்தோர், நில ஆர்ஜிதத்தால் பாதிக்கப்பட்டோர், சுதந்திரப்போராட்ட தியாகிகளின் வாரிசுகள், ஊனமுற்றோர்), அருந்ததி இனத்தார் ஆகியோர் 31.10.2009 வரையிலும் பதிவு செய்துள்ள விபரங்கள் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்து வெப்சைட்டில் பெயர் இடம் பெற வில்லை எனில் அந்த பதிவுதாரர் மட்டும் தங்களது அசல் கல்விச் சான்று மற்றும் வேலை வாய்ப்பு அடையாள அட்டையுடன் வரும் 27ம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரிடம் நேரில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். பதிவு விவரங்கள் வெப்சைட்டில் இடம் பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வர தேவையில்லை என்று வேலை வாய்ப்பு அலுவலர் சுஜயசேகரன் நாயர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us