தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்கள் மாணவர்களாகவே இருக்க வேண்டும்

ஆசிரியர்கள் மாணவர்களாகவே இருக்க வேண்டும்

ஆசிரியர்கள் மாணவர்களாகவே இருக்க வேண்டும்


UPDATED : நவ 26, 2009 12:00 AM

ADDED : நவ 26, 2009 04:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2009 12:00 AM ADDED : நவ 26, 2009 04:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: “ஆசிரிரியர்கள் எப்போதும் மாணவர்களாகவே இருக்க வேண்டும். மேலும் கற்பதற்கான உத்வேகத்தை இதன் மூலம் பெற முடியும்,” என்று பல்கலை மானியக்குழு இணை செயலாளர் ராஜேஷ் ஆனந்த் கூறினார்.


பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கான 10 நாள் பணியிடை பயிற்சியின் துவக்க விழா, பல்கலையில் நேற்று (நவ. 25ம் தேதி) நடந்தது. 50 கல்லூரிகளை சேர்ந்த 100 விரிவுரையாளர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். பயிற்சியை பல்கலை மானியக்குழு இணைச் செயலாளர் ராஜேஷ் ஆனந்த் துவக்கி வைத்தார்.


விழாவில் அவர் பேசுகையில், “விரிவுரையாளர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்கப்படுவது தமிழகத்தில் இதுதான் முதல் முறை. முன்பு விரிவுரையாளர் பணிக்கான நியமனம் கிடைத்தவுடன், பாடம் நடத்துவது சிரமமாக இருக்கும். இப்போது அந்த நிலை மாறி விட்டது. இது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுவதால், வகுப்புகளை எளிதில் கையாளலாம்.


முக்கியமாக உளவியல், மொழியியல், மதிப்பீடு ஆகியவற்றை கையாள இது போன்ற பணியிடை பயிற்சி பெறுவது முக்கியம். எவ்வளவு பயிற்சி கிடைத்தாலும் ஒரு ஆசிரியர் எப்போதும் மாணவர் ஆகவே இருக்க வேண்டும். அப்போதுதான் மேலும், மேலும் கற்பதற்கான உத்வேகம் பிறக்கும். புதிய விஷயங்களை தெரிந்து கொண்டு மாணவர்களுக்கு அதை கற்றுக் கொடுப்பர்,” என்றார்.


பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் பேசுகையில், “நாங்கள் ஆசிரியராக பணிபுரியும் போது இதே போன்ற பயிற்சிகள் கிடைக்கவில்லை. இந்த கால ஆசிரியர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆசிரியராக பணியேற்பதற்கு முன் இது போன்ற பயிற்சிகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். சிறப்பாக பணிபுரிய இப்பயிற்சி உதவும். வருங்காலங்களிலும் இது தொடர வேண்டும்,” என்றார். பல்கலையின் அகாடமிக் ஸ்டாப் கல்லூரி இயக்குனர் தனிக்கொடி, சிண்டிக்கேட் உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன், பதிவாளர் திருமால்வளவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us