UPDATED : நவ 26, 2009 12:00 AM
ADDED : நவ 26, 2009 05:31 PM
அ நிறம் | அளவு
கோவை: நரசிம்மநாயக்கன் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆதரவற்ற ஏழை மாணவியருக்கு, பாரத ஸ்டேட் வங்கி சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஆதரவற்ற ஏழை மாணவ மாணவியருக்கு பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த வரிசையில் நரசிம்மநாயக்கன் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் ஆதரவற்ற ஐந்து ஏழை மாணவியருக்கு, 15,400 ரூபாய் மதிப்புள்ள சீருடை, புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பள்ளித் தலைமை ஆசிரியர் மேரி விக்டோரியா முன்னிலையில், நரசிம்மநாயக்கன்பாளையம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் குணசேகர் மாணவியரிடம் இப்பொருட்களை வழங்கினார். ஆசிரியர்கள், மாணவ மாணவியர் பலர் பங்கேற்றனர்.
